வணக்கம்! பாடம் 2-ல் தன்மை [First Person], முன்னிலை [Second Person], படர்க்கை [Third Person] பற்றி பார்த்தோம். இனி பாடம் 3-ல் வினைச்சொல் மற்றும் அவற்றின் காலங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் என்கிறோம். அதாவது ஒரு செயல், நிகழ்ச்சி, ஒருவரின் அல்லது ஒன்றின் நிலை - ஆகியவற்றைப் பற்றிக் கூறும் சொல் வினைச்சொல் ஆகும். உதாரணமாக
I came to see you. |
---|
நான் உன்னை காண வந்தேன். |
இதில் came மற்றும் see ஆகியவை வினைச்சொல்லாகும் (Verb).
இந்த வினைச்சொற்கள் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
Present Tense (நிகழ் காலம்) | Past Tense (இறந்த காலம்) | Past Participle (இறந்த கால எச்சம்) | Present Participle நிகழ் கால எச்சம் |
---|---|---|---|
See (பார்) | Saw (பார்க்கப்பட்டது) | seen (பார்க்கப்பட்டிருக்கிறது) | seeing (பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது) |
நிகழ்காலம் » PRESENT TENSE - தற்பொழுது நடைபெறுகிற ஒரு செயலை நிகழ்காலம் என்பர்.
I see a Cat (நான் ஒரு பூனையை பார்க்கிறேன்).
இறந்தகாலம் » PAST TENSE - தற்பொழுதோ அல்லது முன்போ நடைபெற்று முடிந்த ஒரு செயலை இறந்த காலம் என்பர்.
I saw a Cat (நான் ஒரு பூனையை பார்த்தேன்).
இறந்தகால எச்சம் » PAST PARTICIPLE - தற்பொழுதோ அல்லது முன்போ நடைபெற்று முடிந்திருக்கின்ற அதாவது முடிக்கப்பட்ட ஒரு செயல் தொடருமேயானால் அதை இறந்தகால எச்சம் என்பர்.
I have seen a Cat (நான் ஒரு பூனையை பார்த்திருக்கிறேன்). இவை கண்டிப்பாக ஒரு துணை வினைச்சொல்லுடன் (helping verbs) தான் பயன்படுத்தப்படவேண்டும்.
நிகழ்கால எச்சம் » PRESENT PARTICIPLE - தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஒரு செயல் முடிவடையாமல் தொடருமேயானால் அதை நிகழ்கால எச்சம் என்பர்.
I am seeing a Cat (நான் ஒரு பூனையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்). இவை கண்டிப்பாக ஒரு துணை வினைச்சொல்லுடன் (helping verbs) தான் பயன்படுத்தப்படவேண்டும்.
1.REGULAR VERBS [WEAK VERB] : நிகழ்கால (Present Tense) வினைச்சொல்லுடன் -d (அ) -ed ஐ சேர்த்து இறந்த கால வினைச்சொல்லாகவோ (Past Tense) அல்லது இறந்தகால எச்ச வினைச்சொல்லாகவோ (Past Participle) மாறும் வினைச்சொல்லுக்கு ஈற்று இணைப்பு வினைச்சொல் (Regular Verb or Weak Verb) எனப்படும்.
2.IRREGULAR VERBS [STRONG VERB] :
(i) வினைச்சொல் அதனுடைய நிகழ்காலம், இறந்தகாலம் மற்றும் இறந்தகால எச்சம் ஆகிய மூன்று காலங்களிலும் மாறாமல் இருத்தல். (உ.ம்) cut - cut - cut.
(ii) வினைச்சொல் அதனுடைய நிகழ்காலம் தவிர மற்ற காலங்களில் மாற்றம் ஏற்ப்பட்டால் (-d, -ed சேர்க்கப்படாமல்).(உ.ம்) go - went - gone.
அடுத்து பாடம் 4-இல் காலங்களைப் பற்றி பார்ப்போம்.