வணக்கம்! பாடம் 3-ல் வினைச்சொல் மற்றும் அவற்றின் காலங்களைப் பற்றி பார்த்தோம். இனி பாடம் 4-ல் காலங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
காலம் » TENSE - ஒரு செயலின் நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிடும் வடிவம் காலம் (Tense) எனப்படும். இந்நிகழ்வுகள் மூன்று முக்கிய காலங்களைக் கொண்டுள்ளது.
Present Tense | Past Tense | Future Tense |
---|---|---|
நிகழ்காலம் | இறந்தகாலம் | எதிர்காலம் |
நிகழ் (Present) மற்றும் இறந்த (Past) காலத்தைப் பற்றி நாம் பாடம் 3-இல் பார்த்துவிட்டோம். இனி எதிர் காலத்தைப் (Future Tense) பற்றி பார்ப்போம்.
ஒரு செயல் இனி நடைபெறும் என்று விளக்கினால் அதை எதிர்காலம் என்பர்.
I shall / will see a Cat (நான் ஒரு பூனையை பார்ப்பேன்). இவை கண்டிப்பாக நிகழ்கால வினைச்சொல்லுடனோ (Present Verb) அல்லது இறந்த கால எச்ச வினைச்சொல்லுடனோ (Past Participle Verb) shall (அ) will என்ற துணை வினையைக் கொண்டு பயன்படுத்தப்படவேண்டும். அப்பொழுது தான் அது எதிர்கால வாக்கியமாக அமையும்.
Auxiliary Verbs பற்றி அறிய Verb Dictionary-ஐ காண்க.
அடுத்து பாடம் 5-இல் வினைச்சொல்லின் காலங்களை வைத்துக் கொண்டு வாக்கிய அமைப்பை பற்றி பார்ப்போம்.