வணக்கம்! பாடம் 7-ல் தொடர் வாக்கியங்கள் [CONTINUOUS SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்த்தோம். இனி பாடம் 8-ல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து ஒரு முடிவுற்ற (அ) முடிந்த (அ) பூர்த்தியான வாக்கியங்கள் [PERFECT SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.
வினைச்சொற்கள் [List of Verbs] பற்றி நாம் பாடம் 3 -இல் படித்தோம். தற்பொழுது வினைச்சொல் [VERB] » GO -வை உதாரணமாக வைத்துக்கொண்டு ஒரு முடிவுற்ற (அ) முடிந்த (அ) பூர்த்தியான [PERFECT SENTENCES] வாக்கியத்தை உருவாக்கலாம்.
Present Tense | Past Tense | Past Participle |
---|---|---|
Go | Went | Gone |
ஒரு முடிவுற்ற (அ) முடிந்த (அ) பூர்த்தியான வாக்கியங்கள் [PERFECT SENTENCES]
Present Perfect [முடிவுற்ற நிகழ்காலம்] |
Past Perfect [முடிவுற்ற இறந்தகாலம்] |
Future Perfect [முடிவுற்ற எதிர்காலம்] |
---|---|---|
I have gone நான் சென்றிருக்கிறேன் |
I had gone நான் சென்றிருந்தேன் |
I shall/will have gone நான் சென்றிருப்பேன் |
We have gone நாம் சென்றிருக்கிறோம் |
We had gone நாம் சென்றிருந்தோம் |
We shall/will have gone நாம் சென்றிருப்போம் |
You have gone நீ சென்றிருக்கிறாய் |
You had gone நீ சென்றிருந்தாய் |
You will have gone நீ சென்றிருப்பாய் |
He has gone அவன் சென்றிருக்கிறான் |
He had gone அவன் சென்றிருந்தான் |
He will have gone அவன் சென்றிருப்பான் |
She has gone அவள் சென்றிருக்கிறாள் |
She had gone அவள் சென்றிருந்தாள் |
She will have gone அவள் சென்றிருப்பாள் |
It has gone அது சென்றிருக்கிறது |
It had gone அது சென்றிருந்தது |
It will have gone அது சென்றிருக்கும் |
They have gone அவர்கள் சென்றிருக்கிறார்கள் |
They had gone அவர்கள் சென்றிருந்தார்கள் |
They will have gone அவர்கள் சென்றிருப்பார்கள் |
HAVE/HAS | HAD | SHALL/WILL HAVE |
---|---|---|
இருக்கிறது | இருந்தது | இருக்கும் |
முடிவு பெற்ற ஒரு செயல் நிகழ்காலத்தில் குறிப்பிட்டால் அவை நிகழ்கால முடிவுற்ற வாக்கியம் ஆகும்.
நிகழ்காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் நிகழ்கால துணை வினைச்சொல்லையும் [AUXILARY VERB], இறந்தகால எச்ச வினைச்சொல்லையும் [PAST PARTICIPLE VERB] இணைத்து் நிகழ்கால முடிவுற்ற வாக்கியம் [PRESENT PERFECT SENTENCE] உருவாக்கப்படுகிறது.
Subject + Present Auxilary Verb + Past Participle Verb.
SUBJECT | PRESENT AUXILARY VERB | PAST PARTICIPLE VERB |
---|---|---|
I | have | gone |
We | ||
You | ||
They | ||
He | has | gone |
She | ||
It |
நிகழ்காலத்தில் have மற்றும் has ஆகிய நிகழ்கால துனைவினைச் சொற்கள் கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த எழுவாய்க்கு [SUBJECT] மட்டும் பொருந்தும்.
HAVE => First Person Singular [I], First Person Plural [WE], Second Person [YOU] and Third Person Plural [THEY].
HAS => Third Person Singular [HE/SHE/IT].
முடிவு பெற்ற ஒரு செயல் இறந்த காலத்தில் குறிப்பிட்டால் அவை இறந்தகால முடிவுற்ற வாக்கியம் ஆகும்.
இறந்த காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் இறந்தகால துணை வினைச்சொல்லையும் [AUXILARY VERB], இறந்தகால எச்ச வினைச்சொல்லையும் [PAST PARTICIPLE VERB] இணைத்து் இறந்தகால முடிவுற்ற வாக்கியம் [PAST PERFECT SENTENCE] உருவாக்கப்படுகிறது.
Subject + Past Auxilary Verb + Past Participle Verb.
SUBJECT | PAST AUXILARY VERB | PAST PARTICIPLE VERB |
---|---|---|
I | had | gone |
We | ||
You | ||
He | ||
She | ||
It | ||
They |
இறந்தகாலத்தில் had என்ற இறந்தகால துனைவினைச் சொல் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து எழுவாய்க்கும் [SUBJECT] பொருந்தும்.
HAD => First Person Singular [I], First Person Plural [WE], Second Person [YOU] and Third Person Plural [THEY]
Third Person Singular [HE/SHE/IT].
ஒரு செயல் எதிர்காலத்தில் முடிவு பெற்றிருக்கும் என நாம் குறிப்பிட்டால் அவை எதிர்கால முடிவுற்ற வாக்கியம் ஆகும்.
எதிர்காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் எதிர்கால துணை வினைச்சொல்லையும் [AUXILARY VERB], இறந்தகால எச்ச வினைச்சொல்லையும் [PAST PARTICIPLE VERB] இணைத்து் எதிர்கால முடிவுற்ற வாக்கியம் [FUTURE PERFECT SENTENCE] உருவாக்கப்படுகிறது.
Subject + Future Auxilary Verb + Past Participle Verb.
SUBJECT | FUTURE AUXILARY VERB | PAST PARTICIPLE VERB |
---|---|---|
I | shall have | gone |
We | ||
You | will have | gone |
They | ||
He | gone | |
She | ||
It |
எதிர்காலத்தில் shall have மற்றும் will have ஆகிய எதிர்கால துனைவினைச் சொற்கள் கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த எழுவாய்க்கு [SUBJECT] மட்டும் பொருந்தும்.
SHALL HAVE => First Person Singular [I], First Person Plural [WE].
WILL HAVE => Second Person [YOU] and Third Person Plural [THEY].
WILL HAVE => Third Person Singular [HE/SHE/IT].
அடுத்து பாடம் 9 -இல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து முற்றுப் பெற்ற (அ) பூரண வாக்கியங்கள் [PERFECT CONTINUOUS SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.