வணக்கம்! பாடம் 6-ல் எளிய வாக்கியங்கள் [SIMPLE SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்த்தோம். இனி பாடம் 7-ல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து தொடர் வாக்கியங்கள் [CONTINUOUS SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.
வினைச்சொற்கள் [List of Verbs] பற்றி நாம் பாடம் 3 -இல் படித்தோம். தற்பொழுது வினைச்சொல் [VERB] » GO -வை உதாரணமாக வைத்துக்கொண்டு தொடர் [CONTINUOUS SENTENCES] வாக்கியத்தை உருவாக்கலாம்.
Present Tense | Past Tense | Past Participle |
---|---|---|
Go | Went | Gone |
தொடர் வாக்கியங்கள் [CONTINUOUS SENTENCES]
Present Continuous [நிகழ்காலத் தொடர்] |
Past Continuous [இறந்தகாலத் தொடர்] |
Future Continuous [எதிர்காலத் தொடர்] |
---|---|---|
I am going நான் சென்று கொண்டிருக்கிறேன் |
I was going நான் சென்று கொண்டிருந்தேன் |
I shall/will be going நான் சென்று கொண்டிருப்பேன் |
We are going நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் |
We were going நாங்கள் சென்று கொண்டிருந்தோம் |
We shall/will be going நாங்கள் சென்று கொண்டிருப்போம் |
You are going நீ சென்று கொண்டிருக்கிறாய் |
You were going நீ சென்று கொண்டிருந்தாய் |
You will be going நீ சென்று கொண்டிருப்பாய் |
He is going அவன் சென்று கொண்டிருக்கிறான் |
He was going அவன் சென்று கொண்டிருந்தான் |
He will be going அவன் சென்று கொண்டிருப்பான் |
She is going அவள் சென்று கொண்டிருக்கிறாள் |
She was going அவள் சென்று கொண்டிருந்தாள் |
She will be going அவள் சென்று கொண்டிருப்பாள் |
It is going அது சென்று கொண்டிருக்கிறது |
It was going அது சென்று கொண்டிருந்தது |
It will be going அது சென்று கொண்டிருக்கும் |
They are going அவர்கள் சென்று கொண்டிருகிறார்கள் |
They were going அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள் |
They will be going அவர்கள் சென்று கொண்டிருப்பார்கள் |
ஒரு செயல் தொடர்ச்சியாக தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டிருந்தால் அவை நிகழ்காலத் தொடர் வாக்கியம் ஆகும்.
நிகழ்காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் நிகழ்கால துணை வினைச்சொல்லை [AUXILARY VERB] சேர்த்தபின்பு நிகழ்கால வினைச்சொல்லுடன் [PRESENT TENSE VERB] ing இணைத்துவிட்டால் நிகழ்கால தொடர்நிலை வாக்கியம் [PRESENT CONTINUOUS SENTENCE] உருவாகும்.
Subject + Present Auxilary Verb + Present Tense Verb + GERUND.
SUBJECT | PRESENT AUXILARY VERB | PRESENT TENSE VERB | GERUND |
---|---|---|---|
I | am | go | ing |
We | are | go | ing |
You | |||
They | |||
He | is | go | ing |
She | |||
It |
நிகழ்காலத்தில் am, are மற்றும் is ஆகிய நிகழ்கால துனைவினைச் சொற்கள் கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த எழுவாய்க்கு [SUBJECT] மட்டும் பொருந்தும்.
AM => First Person Singular [I].
ARE => First Person Plural [WE], Second Person [YOU] and Third Person Plural [THEY].
IS => Third Person Singular [HE/SHE/IT].
ஒரு செயல் தொடர்ச்சியாக முன்பு நடைப்பெற்றுக் கொண்டிருந்தால் அவை இறந்தகாலத் தொடர் வாக்கியம் ஆகும்.
இறந்த காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் இறந்த கால துணை வினைச்சொல்லை [AUXILARY VERB] சேர்த்தபின்பு நிகழ்கால வினைச்சொல்லுடன் [PRESENT TENSE VERB] ing இணைத்துவிட்டால் இறந்தகால தொடர்நிலை வாக்கியம் [PAST CONTINUOUS SENTENCE] உருவாகும்.
Subject + Past Auxilary Verb + Present Tense Verb + GERUND.
SUBJECT | PAST AUXILARY VERB | PRESENT TENSE VERB | GERUND |
---|---|---|---|
We | were | go | ing |
You | |||
They | |||
I | was | go | ing |
He | |||
She | |||
It |
இறந்தகாலத்தில் were மற்றும் was ஆகிய இறந்தகால துனைவினைச் சொற்கள் கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த எழுவாய்க்கு [SUBJECT] மட்டும் பொருந்தும்.
WERE => First Person Plural [WE], Second Person [YOU] and Third Person Plural [THEY].
WAS => First Person Singular [I], Third Person Singular [HE/SHE/IT].
ஒரு செயல் நிகழ்காலத்தில் (அ) இறந்த காலத்தில் அல்லாமல் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்குமேயானால் அவை எதிர்காலத் தொடர் வாக்கியம் ஆகும்.
எதிர் காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் shall be / will be என்ற எதிர்கால துணை வினைச்சொல்லை [AUXILARY VERB] சேர்த்தபின்பு நிகழ்கால வினைச்சொல்லுடன் [PRESENT TENSE VERB] ing இணைத்துவிட்டால் எதிர்கால தொடர்நிலை வாக்கியம் [FUTURE CONTINUOUS SENTENCE] உருவாகும்.
Subject + Present Auxilary Verb + Present Tense Verb + GERUND.
SUBJECT | FUTURE AUXILARY VERB | PRESENT TENSE VERB | GERUND |
---|---|---|---|
I | shall be | go | ing |
We | |||
You | will be | go | ing |
They | |||
He | |||
She | |||
It |
எதிர்காலத்தில் shall be மற்றும் will be ஆகிய எதிர்கால துனைவினைச் சொற்கள் கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த எழுவாய்க்கு [SUBJECT] மட்டும் பொருந்தும்.
SHALL BE => First Person Singular [I], First Person Plural [WE].
WILL BE => Second Person [YOU], Third Person Singular [HE/SHE/IT] and Third Person Plural [THEY].
அடுத்து பாடம் 8 -இல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து முற்றுப் பெற்ற (அ) பூரண வாக்கியங்கள் [PERFECT SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.