வணக்கம்! பாடம் 11-ல் NOUN, PRONOUN, ADJECTIVE, VERB and ADVERB பற்றி பார்த்தோம். இனி பாடம் 12-ல் வினை உருப்பிடைச்சொல் (Preposition) பற்றி பார்ப்போம்.
ஒரு வாக்கியத்தில் வருகின்ற பெயர்ச்சொல் [NOUN] உடன் மற்றொரு பெயர்ச்சொல் [NOUN] அல்லது பெயர் உரிச்சொல் என்னும் இவற்றுள் ஏதாவது ஒன்றுக்குள் உள்ள தொடர்பை விளக்குவதற்கு பயன்படுத்தப்படும் சொல் உருப்பிடைச்சொல் (அ) முன்னிடைச்சொல் [PREPOSITION] எனப்படும்.
PREPOSITION | MEANING |
---|---|
about | பற்றி |
above | மேல் |
across | குறுக்கே |
after | பிறகு |
against | எதிராக |
along | வழியாக, நெடுக்கில், அதனோடு |
among | மத்தியில், நடுவே |
around | சுற்றிலும் |
as | போல |
at | இல், இடத்தில் |
before | முன்னால் |
behind | பின்னால் |
beside | அருகில் |
besides | மேலும், கூட |
between | இடையில் |
beyond | அப்பால், தவிர |
by | ஆல் |
during | பொழுது |
except | தவிர |
for | க்கு / க்காக |
from | இருந்து |
in | இல், உள்ளே |
inside | உள்ளே |
into | இல், உள்நோக்கி |
like | போல, அதுமாதிரி |
near | அருகில் |
of | இன், உடைய |
on | மேலே, இல் |
outside | வெளியே |
over | மேலே |
since | இருந்து |
through | மூலம் |
till | வரைக்கும் |
to | க்கு, வரை |
towards | நோக்கி |
under | அடியில், கீழ் |
up | மேலே |
with | உடன் |
within | உள்ளாக |
without | இன்றி |
PREPOSITION -கள் தமிழ் மொழியில் [NOUN] பெயர்ச்சொல்லுக்குப் பின்னாலும், ஆங்கில மொழியில் [NOUN] பெயர்ச்சொல்லுக்கு முன்னாலும் வருகின்றன.