வணக்கம்! பாடம் 1-ல் ஆங்கில எழுத்துக்கள் பற்றியும் அவற்றை வைத்து சொற்கள் உருவக்கப்படுவதைப் பற்றியும் பார்த்தோம். இனி பாடம் 2-ல் மாற்றுப் பெயர்ச்சொல் பற்றியும் ஒருமை மற்றும் பன்மை பற்றியும் பார்ப்போம்.
மாற்றுப்பெயர்ச்சொல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே
FIRST PERSON SINGULAR | முதலாம் நபர் (தன்மை) ஒருமை |
---|---|
I | நான் |
ME | என்னை |
MY / MINE | என்னுடைய / என்னுடையது |
FIRST PERSON PLURAL | முதலாம் நபர் (தன்மை) பன்மை |
---|---|
WE | நாம் / நாங்கள் |
OUR / OURS | நம்முடைய (எங்களுடைய) / நம்முடையது (எங்களுடையது) |
SECOND PERSON | இரண்டாம் நபர் (முன்னிலை) |
---|---|
YOU | நீ / நீங்கள் / உன்னை / உங்களை |
YOUR | உன்னுடைய / உங்களுடைய |
YOURS | உன்னுடையது / உங்களுடையது |
THIRD PERSON SINGULAR | மூன்றாம் நபர் (படர்க்கை) ஒருமை |
---|---|
HE | அவன் |
SHE | அவள் |
IT | அது |
HIM | அவனை |
HER | அவளை / அவளுக்கு |
HIS | அவனுடைய |
HERS | அவளுடையது |
ITs | அதனுடையது |
THIRD PERSON PLURAL | மூன்றாம் நபர் (படர்க்கை) பன்மை |
---|---|
THEY | அவர்கள் / அவைகள் |
THEM | அவர்களை / அவைகளை |
THEIR | அவர்களுடைய / அவைகளுடைய |
THEIRS | அவர்களுடையது / அவைகளுடையது |
ஒருமை [SINGULAR] » ஒரே ஒரு பொருளையோ (அ) இடத்தையோ (அ) நபரையோ மட்டும் குறிப்பிட்டால் அது ஒருமை எனப்படும்.
Book | புத்தகம் |
Bus | பேருந்து |
Tree | மரம் |
Glass | கண்ணாடி |
City | நகரம் |
பன்மை [PLURAL] » ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளையோ (அ) இடத்தையோ (அ) நபரையோ குறிப்பிட்டால் அது பன்மை எனப்படும்.
Books | புத்தகங்கள் |
Buses | பேருந்துகள் |
Trees | மரங்கள் |
Glasses | கண்ணாடிகள் |
Cities | நகரங்கள் |
ஒருமையை பன்மையாக்கும் முறைகள் [FORMATION OF PLURAL] »
ஒருமைச் சொற்களுடன் ‘S’ மட்டும் சேர்த்து பன்மையாக மாற்றப்படும் சில சொற்கள்.
SINGULAR [ஒருமை] | PLURAL [பன்மை] |
---|---|
Book - புத்தகம் | Books - புத்தகங்கள் |
Tree - மரம் | Trees - மரங்கள் |
Girl - சிறுமி | Girls - சிறுமிகள் |
Cat - பூனை | Cats - பூனைகள் |
ஒருமைச் சொற்களுடன் ‘ES’ மட்டும் சேர்த்து பன்மையாக மாற்றப்படும் சில சொற்கள். இவ்வகையான சொற்கள் S, SH, CH, X, O மற்றும் Z என்ற எழுத்துக்களோடு முடிவடைய வேண்டும்.
SINGULAR [ஒருமை] | PLURAL [பன்மை] |
---|---|
Bus - பேருந்து | Buses - பேருந்துகள் |
Glass - கண்ணாடி | Glasses - கண்ணாடிகள் |
Brush - துடைப்பான் | Brushes - துடைப்பான்கள் |
Match - போட்டி | Matches - போட்டிகள் |
Torch - ஒளிவிளக்கு | Torches - ஒளிவிளக்குகள் |
Box - பெட்டி | Boxes - பெட்டிகள் |
Tax - வரி | Taxes - வரிகள் |
Mango - மாம்பழம் | Mangoes - மாம்பழங்கள் |
Photo - புகைப்படம் | Photoes - புகைப்படங்கள் |
Buzz - சப்தம் | Buzzes - சப்தங்கள் |
ஒருமைச் சொல்லின் கடைசி எழுத்து ‘Y’ -ஆகா இருந்தால் அதை நீக்கிவிட்டு ‘IES’ என்ற எழுத்துக்களை சேர்க்க வேண்டும்.
SINGULAR [ஒருமை] | PLURAL [பன்மை] |
---|---|
City - நகரம் | Cities - நகரங்கள் |
Duty - கடமை | Duties - கடமைகள் |
Baby - குழந்தை | Babies - குழந்தைகள் |
Lady - பெண் | Ladies - பெண்கள் |
Army - இராணுவப்படை | Armies - இராணுவப்படைகள் |
ஒருமைச் சொல்லை பன்மையாக மாற்றும் பொழுது அந்த ஒருமைச் சொல்லின் கடைசி எழுத்து ‘Y’ -ஆகா இருந்து அந்த எழுத்திற்கும் முன் உயிர் எழுத்துக்களான ‘A E I O U’-இவற்றில் ஏதேனும் ஒரு எழுத்து இருக்குமேயானால் அந்த கடைசி எழுத்தான ‘Y’ -ஐ மாற்றாமல் அதனுடன் ‘S’ மட்டும் சேர்த்தால் போதுமானது.
SINGULAR [ஒருமை] | PLURAL [பன்மை] |
---|---|
Boy - சிறுவன் | Boys - சிறுவர்கள் |
Day - நாள் | Days - நாட்கள் |
Monkey - குரங்கு | Monkeys - குரங்குகள் |
Key - சாவி | Keys - சாவிகள் |
Toy - பொம்மை | Toys - பொம்மைகள் |
Way - பாதை | Ways - பாதைகள் |
ஒருமைச் சொல்லின் கடைசி எழுத்து ‘F’ (அ) ‘FE’ -ஆகா இருந்தால் அதை நீக்கிவிட்டு ‘ves’ என்ற எழுத்துக்களை சேர்க்க வேண்டும்.
SINGULAR [ஒருமை] | PLURAL [பன்மை] |
---|---|
Calf - கன்று | Calves - கன்றுகள் |
Thief - திருடன் | Thieves - திருடர்கள் |
Leaf - இலை | Leaves - இலைகள் |
Knife - கத்தி | Knives - கத்திகள் |
Wolf - நரி | Wolves - நரிகள் |
Wife - மனைவி | Wives - மனைவிகள் |
மேற்கண்ட எவ்விதியையும் சாராத சில ஒருமைச் சொற்கள் உண்டு. அவையாவன
SINGULAR [ஒருமை] | PLURAL [பன்மை] |
---|---|
Man - ஆண் | Men - ஆண்கள் |
Woman - பெண் | Women - பெண்கள் |
Foot - அடி / பாதம் | Feet - அடிகள் / பாதங்கள் |
Tooth - பல் | Teeth - பற்கள் |
Analysis - பகுப்பாய்வு | Analyses - பகுப்பாய்வுகள் |
Formula - சூத்திரம் | Formulae - சூத்திரங்கள் |
Brief - சுருக்கம் | Briefs - சுருக்கங்கள் |
Roof - கூரை | Roofs - கூரைகள் |
Ox - எருது | Oxen - எருதுகள் |
Child - குழந்தை | Children - குழந்தைகள் |
Deer - மான் | Deer - மான்கள் |
Fish - மீன் | Fish - மீன் |
Sheep - செம்மறி ஆடு | Sheep - செம்மறி ஆடுகள் |
Swine - பன்றி | Swine - பன்றிகள் |
அடுத்து பாடம் 3-இல் வினைச்சொல் பற்றி பார்ப்போம்.