வணக்கம்! பாடம் 5-ல் வாக்கிய அமைப்பை பற்றி பார்த்தோம். இனி பாடம் 6-ல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து வாக்கியங்கள் உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.
வினைச்சொற்கள் [List of Verbs] பற்றி நாம் பாடம் 3 -இல் படித்தோம். தற்பொழுது வினைச்சொல் [VERB] » GO -வை உதாரணமாக வைத்துக்கொண்டு வாக்கியத்தை உருவாக்கலாம்.
Present Tense | Past Tense | Past Participle |
---|---|---|
Go | Went | Gone |
எளிய வாக்கியங்கள் [SIMPLE SENTENCES]
Present Tense [நிகழ்காலம்] | Past Tense [இறந்த காலம்] | Future Tense [எதிர்காலம்] |
---|---|---|
I go நான் செல்கிறேன் |
I went நான் சென்றேன் |
I shall/will go நான் செல்வேன் |
We go நாம் செல்கிறோம் |
We went நாம் சென்றோம் |
We shall/will go நாம் செல்வோம் |
You go நீ செல்கிறாய் |
You went நீ சென்றாய் |
You will go நீ செல்வாய் |
He goes அவன் செல்கிறான் |
He went அவன் சென்றான் |
He will go அவன் செல்வான் |
She goes அவள் செல்கிறாள் |
She went அவள் சென்றாள் |
She will go அவள் செல்வாள் |
It goes அது செல்கிறது |
It went அது சென்றது |
It will go அது செல்லும் |
They go அவர்கள் செல்கிறார்கள் |
They went அவர்கள் சென்றார்கள் |
They will go அவர்கள் செல்வார்கள் |
பாடம் 2 -ஐ கவனிக்கவும்.
மேற்கண்ட அட்டவணையின்படி
நிகழ்காலத்தில் I, WE [1st PERSON] and YOU [2nd PERSON] ஆகிய எழுவாய்கள் [SUBJECTS] ஆனது அதனுடைய செயலைக் குறிப்பிடும் பொழுது நிகழ்கால வினைச்சொல்லான go [PRESENT TENSE VERB] அப்படியே சேர்க்கவேண்டும். உதாரணமாக
1st PERSON + PRESENT TENSE VERB [SINGULAR] -> I/WE + GO
or
2nd PERSON + PRESENT TENSE VERB [SINGULAR]
-> YOU + GO
நிகழ்காலத்தில் HE, SHE and IT [3rd PERSON SINGULAR] ஆகிய எழுவாய்கள் [SUBJECTS] ஆனது அதனுடைய செயலைக் குறிப்பிடும் பொழுது நிகழ்கால வினைச்சொல்லான go [PRESENT TENSE VERB] -வை பன்மையாக [PLURAL] மாற்றி சேர்க்கவேண்டும். உதாரணமாக
3rd PERSON SINGULAR + PRESENT TENSE VERB [PLURAL]
-> HE/SHE/IT + GOES
பாடம் 2 -இல் ஒருமை [SINGULAR] மற்றும் பன்மை [PLURAL] அமைப்பை பற்றி கவனிக்கவும்.
நிகழ்காலத்தில் THEY [3rd PERSON PLURAL] -என்ற எழுவாய் அதனுடைய செயலைக் குறிப்பிடும் பொழுது நிகழ்கால வினைச்சொல்லான go [PRESENT TENSE VERB] அப்படியே சேர்க்கவேண்டும். ஏனெனில்
3rd PERSON SINGULAR + PRESENT TENSE VERB + PLURAL => HE + GOES
3rd PERSON PLURAL + PRESENT TENSE VERB + SINGULAR => THEY + GO
SUBJECT | PRESENT TENSE VERB |
---|---|
I | go |
We | |
You | |
They |
SUBJECT | PRESENT TENSE VERB |
---|---|
He | goes |
She | |
It |
இறந்த காலத்தில் 1st Person, 2nd Person மற்றும் 3rd Person ஆகிய எழுவாய்கள் அதனுடைய முடிந்த செயலைக் குறிப்பிடும் பொழுது go என்ற நிகழ்கால வினைச்சொல்லின் இறந்த காலமான went -ஐ சேர்க்கவேண்டும்.
SUBJECT + PAST TENSE VERB + SINGULAR
SUBJECT | PAST TENSE VERB |
---|---|
I | went |
We | |
You | |
He | |
She | |
It | |
They |
எதிர் காலத்தில் 1st Person, 2nd Person மற்றும் 3rd Person ஆகிய எழுவாய்கள் அதனுடைய எதிர்கால செயலைக் குறிப்பிடும் பொழுது shall / will என்ற துணை வினைச்சொல்லையும் [Auxilary Verb], go என்ற நிகழ்கால [VERB] வினைச்சொல்லையும் சேர்க்கவேண்டும்.
SUBJECT | AUXILARY VERB | PRESENT TENSE VERB |
---|---|---|
I | Shall | go |
We |
SUBJECT | AUXILARY VERB | PRESENT TENSE VERB |
---|---|---|
You | Will | go |
He | ||
She | ||
It | ||
They |
Shall மற்றும் Will எங்கு பயன்படுத்துவது?
Shall மற்றும் Will ஆகிய இரண்டிற்குமே பொருள் ஒன்றுதான். நாம் தன்மை (1st Person), முன்னிலை (2nd Person), படர்க்கை (3rd Person) ஆகிய மூன்று பிரிவுகள் ஏற்கனவே பாடம் - 2 இல் கண்டோம்.
(i). இவற்றில் முதலாம் நபர் (I, We) shall உபயோகிக்கப்படும் பொழுது அந்த நிகழ்வுகள் நடைபெறலாம் அல்லது நடைபெறாமலும் போகலாம். Will உபயோகிக்கப்படும் பொழுது அந்த நிகழ்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்பது பொருள்.
I | shall | go | - நான் செல்வேன் |
---|---|---|---|
I | will | go | - நான் [உறுதியாக] செல்வேன் |
(ii) முன்னிலை (2nd Person), படர்க்கை (3rd Person) -ல் will உபயோகிக்கப்படும் பொழுது அந்த நிகழ்வுகள் நடைபெறலாம் அல்லது நடைபெறாமலும் போகலாம். Shall உபயோகிக்கப்படும் பொழுது அந்த நிகழ்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்பது பொருள்.
He | will | go | - அவன் செல்வான் |
---|---|---|---|
He | shall | go | - அவன் [உறுதியாக] செல்வான் |
முதலாம் நபர் [1st Person] shall என்ற துனைவினைச்சொல்லையும் இரண்டம் நபர் [2nd Person] மற்றும் மூன்றாம் நபர் [3rd Person] will என்ற துனைவினைச்சொல்லையும் எதிர்கால நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவது மரபு.
நாம் go என்ற வினைச்சொல்லை மட்டுமே வைத்து tense table -ஐ உருவாக்கினோம். தாங்கள் அடுத்த பாடம் செல்வதற்கு முன் இவ்விணையதளத்தில் principal part of verb என்ற menu -விற்குச் சென்று அதில் உள்ள வினைச் சொற்க்களை வைத்து இதுமாதிரியான tense table -ஐ உருவாக்குங்கள். பிறகு அவற்றிக்கு உண்டான தமிழ் அர்த்தத்தைக் கண்டுபிடித்து மனப்பாடம் செய்க. tense table -ஐ உருவாக்க principal part of verb என்ற menu -விற்குச் சென்று அதில் உள்ள ஏதேனும் ஒரு present verbs -ஐ click செய்தால் போதுமானது.
அடுத்து பாடம் 7 -இல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து தொடர் வாக்கியங்கள் [CONTINUOUS SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.