வணக்கம்! பாடம் 8-ல் ஒரு முடிவுற்ற (அ) முடிந்த (அ) பூர்த்தியான வாக்கியங்கள் [PERFECT SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்த்தோம். இனி பாடம் 9-ல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து ஒரு தொடர் பூரண வாக்கியங்கள் [PERFECT CONTINUOUS SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.
வினைச்சொற்கள் [List of Verbs] பற்றி நாம் பாடம் 3 -இல் படித்தோம். தற்பொழுது வினைச்சொல் [VERB] » GO -வை உதாரணமாக வைத்துக்கொண்டு ஒரு தொடர் பூரண [PERFECT CONTINUOUS SENTENCES] வாக்கியத்தை உருவாக்கலாம்.
Present Tense | Past Tense | Past Participle | Present Participle |
---|---|---|---|
Go | Went | Gone | Going |
ஒரு தொடர் பூரண வாக்கியங்கள் [PERFECT CONTINUOUS SENTENCES]
Present Perfect Continuous [தொடர் பூரண நிகழ்காலம்] |
Past Perfect Continuous [தொடர் பூரண இறந்தகாலம்] |
Future Perfect Continuous [தொடர் பூரண எதிர்காலம்] |
---|---|---|
I have been going நான் சென்று கொண்டிருந்திருக்கிறேன் |
I had been going நான் சென்று கொண்டிருந்திருந்தேன் |
I shall/will have been going நான் சென்று கொண்டிருந்திருப்பேன் |
We have been going நாம் சென்று கொண்டிருந்திருக்கிறோம் |
We had been going நாம் சென்று கொண்டிருந்திருந்தோம் |
We shall/will have been going நாம் சென்று கொண்டிருந்திருப்போம் |
You have been going நீ சென்று கொண்டிருந்திருக்கிறாய் |
You had been going நீ சென்று கொண்டிருந்திருந்தாய் |
You will have been going நீ சென்று கொண்டிருந்திருப்பாய் |
He has been going அவன் சென்று கொண்டிருந்திருக்கிறான் |
He had been going அவன் சென்று கொண்டிருந்திருந்தான் |
He will have been going நீ சென்று கொண்டிருந்திருப்பான் |
She has been going அவள் சென்று கொண்டிருந்திருக்கிறாள் |
She had been going அவள் சென்று கொண்டிருந்திருந்தாள் |
She will have been going அவள் சென்று கொண்டிருந்திருப்பாள் |
It has been going அது சென்று கொண்டிருந்திருக்கிறது |
It had been going அது சென்று கொண்டிருந்திருந்தது |
It will have been going அது சென்று கொண்டிருந்திருக்கும் |
They have been going அவர்கள் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள் |
They had been going அவர்கள் சென்று கொண்டிருந்திருந்தார்கள் |
They will have been going அவர்கள் சென்று கொண்டிருந்திருப்பார்கள் |
HAVE/HAS BEEN | HAD BEEN | SHALL/WILL HAVE BEEN |
---|---|---|
கொண்டிருந்து இருக்கிறது | கொண்டிருந்து இருந்தது | கொண்டிருந்து இருக்கும் |
இறந்தகாலத்திலோ (அ) நிகழ்காலத்திலோ தொடங்கப்பட்ட ஒரு செயல் முடிவு பெறாமல் அது தொடருமேயானால் அந்நிகழ்வை நிகழ்காலத்தில் குறிப்பிடும் பொழுது அவை நிகழ்கால தொடர் பூரண வாக்கியம் ஆகும். அதாவது நிகழ்காலத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது பொருள்.
நிகழ்காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் நிகழ்கால துணை வினைச்சொல்லையும் [AUXILARY VERB], நிகழ்கால எச்ச வினைச்சொல்லையும் [PRESENT PARTICIPLE VERB] இணைத்து் நிகழ்கால தொடர் பூரண வாக்கியம் [PRESENT PERFECT CONTINUOUS SENTENCE] உருவாக்கப்படுகிறது.
Subject + Present Auxilary Verb + Present Participle Verb.
SUBJECT | PRESENT AUXILARY VERB | PRESENT PARTICIPLE VERB |
---|---|---|
I | have been | going |
We | ||
You | ||
They | ||
He | has been | going |
She | ||
It |
நிகழ்காலத்தில் have been மற்றும் has been ஆகிய நிகழ்கால துனைவினைச் சொற்கள் கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த எழுவாய்க்கு [SUBJECT] மட்டும் பொருந்தும்.
HAVE BEEN => First Person Singular [I], First Person Plural [WE], Second Person [YOU] and Third Person Plural [THEY].
HAS BEEN => Third Person Singular [HE/SHE/IT].
இறந்தகாலத்தில் தொடங்கப்பட்ட ஒரு செயல் முடிவு பெறாமல் அது தொடருமேயானால் அந்நிகழ்வை இறந்தகாலத்தில் குறிப்பிடும் பொழுது அவை இறந்தகால தொடர் பூரண வாக்கியம் [PAST PERFECT CONTINUOUS SENTENCE] ஆகும். அதாவது இறந்தகாலத்தில் தொடர்ந்து கொண்டே இருந்தது என்பது பொருள்.
இறந்த காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் இறந்தகால துணை வினைச்சொல்லையும் [AUXILARY VERB], நிகழ்கால எச்ச வினைச்சொல்லையும் [PRESENT PARTICIPLE VERB] இணைத்து் இறந்தகால தொடர் பூரண வாக்கியம் [PAST PERFECT CONTINUOUS SENTENCE] உருவாக்கப்படுகிறது.
Subject + Past Auxilary Verb + Present Participle Verb.
SUBJECT | PAST AUXILARY VERB | PRESENT PARTICIPLE VERB |
---|---|---|
I | had been | going |
We | ||
You | ||
He | ||
She | ||
It | ||
They |
இறந்தகாலத்தில் had been என்ற இறந்தகால துனைவினைச் சொல் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து எழுவாய்க்கும் [SUBJECT] பொருந்தும்.
HAD BEEN => First Person Singular [I], First Person Plural [WE], Second Person [YOU] and Third Person Plural [THEY]
Third Person Singular [HE/SHE/IT].
இறந்தகாலத்திலோ (அ) நிகழ்காலத்திலோ தொடங்கப்பட்ட ஒரு செயல் அது எதிர்காலத்திலும் முடிவு பெறாமல் தொடருமேயானால் அந்நிகழ்வை எதிர்காலத்தில் குறிப்பிடும் பொழுது அவை எதிர்கால தொடர் பூரண வாக்கியம் ஆகும். அதாவது எதிர்காலத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொருள்.
எதிர்காலத்தில் எழுவாய் [SUBJECT] உடன் எதிர்கால துணை வினைச்சொல்லையும் [AUXILARY VERB], நிகழ்கால எச்ச வினைச்சொல்லையும் [PRESENT PARTICIPLE VERB] இணைத்து் எதிர்கால தொடர் பூரண வாக்கியம் [FUTURE PERFECT SENTENCE] உருவாக்கப்படுகிறது.
Subject + Future Auxilary Verb + Present Participle Verb.
SUBJECT | FUTURE AUXILARY VERB | PRESENT PARTICIPLE VERB |
---|---|---|
I | shall have been | going |
We | ||
You | will have been | going |
They | ||
He | ||
She | ||
It |
எதிர்காலத்தில் shall have been மற்றும் will have been ஆகிய எதிர்கால துனைவினைச் சொற்கள் கண்டிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த எழுவாய்க்கு [SUBJECT] மட்டும் பொருந்தும்.
SHALL HAVE BEEN => First Person Singular [I], First Person Plural [WE].
WILL HAVE BEEN => Second Person [YOU], Third Person Singular [HE/SHE/IT] and Third Person Plural [THEY].
அடுத்து பாடம் 10 -ல் CONTRACTIONS பற்றி பார்ப்போம்.