List of Sentences for Daily life
நீங்கள் முறையாக ஆங்கில வகுப்பிற்க்குச் சென்றும், ஆங்கில இலக்கண புத்தகம் வைத்து படித்தும் தங்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததற்கான காரணம் என்ன?
தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நான்கு வயது குழந்தை தமிழ் சரளமாக இலக்கணப் பிழை இல்லாமல் பேசுவதற்க்காண காரணம் என்ன?
ஒரு குழந்தையை காண தனது மாமா வீட்டிற்குள் நுழையும் பொழுது அந்த குழந்தையின் தாய் குழந்தையிடம் "வாங்க மாமா" என்று கூறு என்கிறாள். அந்த குழந்தையும் தாய் கற்றுக் கொடுத்த வார்த்தையை தனது மாமா உள்ளே வரும் பொழுது அந்த குழந்தை "வாங்க மாமா" என்று கூறியது. மற்றொரு நாள் மீண்டும் குழந்தையை பார்க்க மாமா வரும் பொழுது தாய் மீண்டும் குழந்தையிடம் "வாங்க மாமா" என்று கூறு என்கிறாள். அந்த குழந்தையும் அவ்வாறே கூறியது. மூன்றாவது முறையாக தனது மாமா குழந்தையைக் காண வரும் பொழுது அந்த குழந்தை "வாங்க மாமா" என்று தாய் கூறாமலேயே தானாக வரவேற்றது. காரணம் அந்த குழந்தை அந்த நிகழ்வுகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு வார்த்தையை மனப்பாடம் செய்து கொண்டது தான்.
எனவே தாங்கள் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டுமானால் இவ்விணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களை மனப்பாடம் செய்து கொண்டு அதற்க்கு உண்டான தமிழ் அர்த்தத்தை ஒரு நிகழ்வுகளாக சித்தரித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.