English Sentences | Tamil Meaning |
---|---|
A poet needs pure heart, talent is secondary | ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம் |
An idle mind is the workshop of devil | ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும் |
Are they observing harthal tomorrow? | நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா? |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
Chicken hearted | தொடை நடுக்கம் |
Do not mind it | அதைப்பற்றி கவலைப்படாதே |
Do you mind making a phone call? | நீங்கள் தொலைபேசி மூலமாக பேசலாம் அல்லவா? |
He has heart tourble | அவருக்கு இருதய நோய் |
He might have a mustache | அவருக்கு மீசை இருக்கலாம் |
He reminds me of his brother | அவனைப் பார்த்தல் எனக்கு அவனுடைய சகோதரன் நினைவுக்கு வருகிறான் |
Heartly felicitations on your birthday | உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் |
His presence of mind saved him | அவனுடைய சமயோசித புத்தி அவனை காப்பாற்றியது |
I have kind heart | எனக்கு இரக்கமான இதயம் இருக்கிறது |
I have made up my mind to send him | அவனை அனுப்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன் |
I have no peace of mind | எனக்கு மன அமைதி இல்லை |
I have set my heart on taking a degree | நான் ஒரு பட்டதை பெற வேண்டுமென உறுதி கொண்டிருக்கிறேன் |
I shall surely keep this in mind | நான் இதைப்பற்றி கவனித்துக்கொள்கிறேன் |
I will keep it in mind | இதை நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன் |
If you do not mind, listen to me | உனக்கு பிரச்சனை இல்லை எனில் என்னை கவனி |
If you do not mind, Sir | உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால் செய்யுங்கள் ஐயா |
If you do not mind... Please ... help me to lift this box | உங்கள்ளுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் இந்தப் பெட்டியைத் தூக்க தயவுசெய்து உதவுங்கள் |
If you don’t mind, I would like to sit here. | நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நான் இங்கே உட்கார விரும்புகிறேன். |
In exchange for this, I will give you my heart | இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன் |
It is a mind blowing | அது மனதை அள்ளுகிறது / மனதை கொல்லைகொள்கிறது |
It reminds me of one of piccaso\'s | இது எனக்கு ஓவியர் பிக்காஷோ ஓவியம் ஒன்றை ஞாபகபடுத்துகிறது |
Learn by heart | மனதிற்குள் படி |
Lion hearted | தைரியசாலி |
Meditation will strengthen your mind | தியானம் உன்னுடைய மனநிலையை பலப்படுத்தும் |
Mind you, you have wounded a cobra | நீ நாகப்பாம்பை தாக்கி இருக்கிறாய் புரிந்து கொள் |
Mind your business | உன் வேலையைப் பார் |
Mind your tongue | நாக்கை அடக்கு |
Mind your words | உன் வார்த்தைகளை கவனி |
Need I remind you to post the letter? | நான் உனக்கு கடிதத்தை தபால்பெட்டியிலிட ஞாபகபடுத்த வேண்டுமா? |
Never mind | பரவாயில்லை |
Please do not mind | தயவு செய்து பொருட்படுத்தவேண்டாம் |
Please do not mind this / Please do not feel bad about it | தவறாக நினைக்க வேண்டாம் |
Please mind the class | தயவு செய்து வகுப்பை கவனித்துக் கோள் |
Please mind your own business | உன் வேலையைப் பார் |
Please remind me of this tomorrow | தயவு செய்து இதைப் பற்றி நாளை எனக்கு நினைவுப் படுத்துங்கள் |
Rajini took to heart the death of his brother | ரஜினி அவரது சகோதரரின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார் |
Remind me at the proper time | உரிய நேரத்தில் நினைவூட்டு |
She is feeble minded | அவள் மந்த புத்தி உள்ளவள் |
The skeletons of animals kept here remind me of ancient times | இந்த விலங்குகளின் எலும்புகள் பத்திரபடுத்தி வைத்திருப்பது ஆதி காலங்களை எனக்கு நினைவுபடுத்துகிறது |
These monkeys remind me of Darvin\'s theory of evolution | இந்த குரங்குகள் எனக்கு டார்வினுடைய பரிணாம கொள்கைகளை ஞாபகபடுத்துகிறது |
This sunflower, the jasmine, the willow, all remind me of my old days | இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து |
Try to by heart these idioms and phrases | இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள் |
What is in your mind? A puranic one or on academic one? | உங்கள் மனதில் இருக்கிறது என்ன? புராண சம்மந்தபட்டதா இல்லையேல் கல்வி சம்மந்தபட்டதா? |
What was manju upset? | மஞ்சுவிற்கு என்ன வருத்தம்? |
Work whole-heartedly | மனம் ஈடுபடுத்தி வேலை செய் |
Would you mind coming with me? | நீங்கள் பொருட்படுத்தாமல் என்னுடன் வரமுடியுமா? |
Would you mind if I ask a question? | நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? |
Would you mind lending me some money? | நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் எனக்கு சிறிது பணம் கடனாக கொடுப்பீர்களா? |
Would you mind moving a bit? | கொஞ்சம் நகருங்களேன் |
Your friend must have a sweet heart | உங்களது நண்பர் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் |