English Sentences | Tamil Meaning |
---|---|
All thorough this period I waited for her | இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன் |
Amitabh must wait till 12'O clock, must not he? | அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா? |
But wait a minute, please | தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருக்கவும் |
Can you wait a moment? | நீங்கள் ஒரு நிமிடம் காத்திருக்க முடியுமா? |
Don’t keep me waiting, please | தயவுசெய்து என்னை காக்க வைக்காதே |
Have you ever been to Kuwait? | குவைத்துக்கு நீங்கள் எப்போதாவது சென்றிருக்கின்றீர்களா? |
He has been waiting for a long time | அவன் வெகு நேரமாக காத்துக்கொண்டிருக்கிறான் |
Here they are. Please wait for the receipt of the speed post | இதோ இருக்கிறது. விரைவு தபால் அனுப்ப எடை பார்த்து ரசீதும் பெற்று கொள்ளவும் |
How long did you wait for me? | நீ எனக்காக எவ்வளவு நேரம் காத்து கொண்டிருந்தாய்? |
How long did you wait? | நீ எவ்வளவு நேரம் காத்திருந்தாய்? |
How long had you been waiting? | எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்? |
How long have you been waiting? | எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்? |
I am awfully sorry to have kept you waiting | நீங்கள் எனக்காக இவ்வளவு நேரம் இருக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன் |
I am fed up waiting for you | நான் உனக்காக காத்திருந்ததினால் சோர்ந்து போய்விட்டேன் |
I am sorry to have kept you waiting | உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும் |
I am sorry to keep you waiting | நான் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிக்கவும் |
I am waiting for my wife | நான் என் மனைவிக்காக காத்திருக்கிறேன் |
I am waiting for you | நான் உனக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன் |
I await my wife | நான் என் மனைவிக்காக காத்திருக்கிறேன் |
I can not wait any longer | என்னால் இனி காத்திருக்க முடியாது |
I cannot wait any longer now | என்னால் இனி காத்திருக்கவே முடியாது |
I had been waiting for two hours. | நான் இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting in the airport for more than two hours when you arrived | நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting in the Hong Kong airport for two hours | நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting there for more than 45 minutes | நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக |
I have been waiting for you for three hours | நான் உனக்காக மூன்று மணி நேரங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன் |
I have been waiting here for over two hours | நான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக இங்கே காத்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been waiting here for two hours | நான் இங்கே இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருக்கின்றேன் |
I shall wait for you | நான் உனக்காக காத்திருப்பேன் |
I shall wait for you at hom | நான் உனக்காக வீட்டில் காத்திருப்பேன் |
I told him to wait | அவனை நான் காத்திருக்கச் சொன்னேன் |
I wait here for my daughter | நான் என் மகளுக்காக இங்கு காத்திருக்கிறேன் |
I waited till he returned | அவன் திரும்பி வரும்வரை நான் காத்திருந்தேன் |
I was waiting for you | நான் உனக்காக காத்துக்கொண்டிருந்தேன் |
I was waiting in the bus stand | நான் பேரூந்து நிறுத்தகத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I was waiting in the bus stop until 6 p.m | நான் 6 மணிவரை வரை பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I will wait any way | எப்படியாயினும் காத்திருக்கிறேன் |
I will wait till you come | நீ வரும் வரை நான் காத்திருப்பேன் |
In any case we will wait till tomorrow | எப்படியாயினும், நாங்கள் நாளை வரையிலும் காத்திருப்போம் |
It lies in wait where deer and other animals pass through to drink water | மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும் |
It was the longest wait of my life | அது எனது வாழ்க்கையில் மிக நீண்ட காத்திருப்பாக இருந்தது |
Let me go and wait there? | நான் அங்கே போய், காத்திருக்கட்டுமா? |
Let us wait and see | பொறுத்திருந்து பார்க்கலாம் |
Please wait | தயவு செய்து காத்திரு |
Please wait for me till I come | தயவுசெய்து நான் வரும்வரை எனக்காகக் காத்திரு |
Please wait till I come | நான் வரும் வரை காத்திரு |
please wait., i too come. | தயவு செய்து காத்திருங்கள்., நானும் வருகிறேன். |
Reeta is waiting for you at the bus stop | உனக்காக ரீட்டா பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள் |
She is waiting for an hour | அவள் ஒருமணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறாள் |
She is waiting for me | அவள் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் |
Somebody is waiting for you | உங்களுக்காக யாரோ காத்துக் கொண்டிருகிறார்கள் |
Someone is waiting for you | உங்களுக்காக யாரோ காத்துக்கொண்டிருக்கிறார்கள் |
Someone is waiting for you somewhere | யாரோ ஒருவர், உனக்காக எங்கோ காத்து கொண்டிருக்கிறார் |
Sorry sir, wait a minute | வருந்துகிறேன் ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள் |
That means, I will have to wait for another one hour? | அப்படியானால், நான் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? |
The train will not wait for you | ரயில் உனக்காக காத்திருக்காது |
They are waiting for the bus | அவர்கள் பேருந்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறீர்கள் |
They will have been waiting for me since 2 O’clock | அவர்கள் எனக்காக இரண்டு மணியிலிருந்து காத்துக் கொண்டிருப்பார்கள் |
Time and tide waits for nobody | நேரமும், அலையும் யாருக்காகவும் காத்திருக்காது |
Wait a minute | ஒரு நிமிடம் தாமதி |