• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - பொறியியல் 50 Questions.

1. மடக்கக்கூடிய ஸ்மார்ட் கைபேசிகளை தயாரிப்பதில் " கிராபீன்" பயன்படுத்தப்படுகிறது.அது பயன்படுத்தப்படும் துறை?
  அல்டிமேட் நீர் சுத்தகரிப்பு சாதனம்
  மீ வில்லைகள்
  மருத்துவ கதிர்வீச்சு வலி நிவாரணம்
  குவாண்டம் கணினிகள்
2. இரும்புத் தாது?
  கோக்
  அர்ஜென்டைன்
  பாக்சைட்
  ஹேமடைட்
3. .................. வாயு ஆகாய மண்டலத்தில் அதிக சதவிகிதத்தில் உள்ளது?
  நைட்ரஜன்
  கார்பன் - டை - ஆக்சைடு
  ஓசோன்
  ஆக்சிஜன்
4. ரேடார் கருவியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
  ஒலி எழுப்புதல் விளைவு
  தாம்சன் விளைவு
  ஒளி விலகல் விளைவு
  டாப்ளர் விளைவு
5. வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திக்கு பரவும் நிகழ்ச்சியே
  வெப்பக் கடத்தல்
  வெப்பச் சலனம்
  வெப்பக்கதிர் வீசல்
  இவை அனைத்தும்
6. நீர்மங்கள் (அ) வாயுக்கள் அழுத்தத்தை அளவிட _____________ பயன்படுகிறது.
  Manometer
  Hyndrometer
  Lactometer
  Charometer
7. ஒரு சதுர பொருளின் புவிஈர்ப்பு மையம் எங்கு காணப்படும்?
  மைய குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி
  அச்சின் மையம்
  மூலை விட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி
  எதிர் பக்கங்களின் மையங்களை இணைக்கும் கோடுகள் சந்திக்கும் புள்ளி
8. ஒரு புகைவண்டி மணிக்கு 18 கிலோமீட்டர் பயணம் செய்கிறது. அப்பொழுது 1 வினாடிக்கு பயணிக்கும் தூரம் எவ்வளவு?
  1 மீட்டர்
  5 மீட்டர்
  18 மீட்டர்
  36 மீட்டர்
9. வேகம் எனப்படுவது
  மொத்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம்
  கடந்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம்
  (மொத்த தூரம் - கடந்த தூரம் ) / எடுத்துக் கொண்ட நேரம்
  மொத்த இடப்பெயச்சி / காலம்
10. இவற்றில் ஒன்று ஸ்கேலார் அளவு வகையச் சார்ந்தது.
  அடர்த்தி
  இடப்பெயச்சி
  திசைவேகம்
  விசை
11. காந்தத் தன்மை மிக அதிகம் உள்ள இரும்பு எது?
  எக்கு
  தேனிரும்பு
  வார்ப்பிரும்பு
  அனைத்தும்
12. தேனிரும்பு எனப்படுவது
  கார்பன், சிலிகான் கொண்ட இரும்பு
  அசுத்தமான இரும்பு
  சுத்தமான இரும்பு
  எளிதில் துருபிடிக்கக் கூடிய இரும்பு
13. தாதுப் பொருட்களிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் இரும்புக்கு ______________ என்று பெயர்.
  எக்கு
  தேனிரும்பு
  வார்ப்பிரும்பு
  கனி இரும்பு
14. மிக அதிக அழுத்தத்தையும் எடையையும் தாங்கக் கூடிய ஓர் உலோகக் கலவை
  செம்பு, வெள்ளீயம், காரீயம்
  செம்பு, வெள்ளீயம், ஆண்டிமோனி
  காரீயம், ஆண்டிமோனி, வெள்ளீயம்
  கேட்மியம், வெள்ளி, செம்பு
15. செம்பையும், வெள்ளீயத்தையும் கலந்து செய்யப்படும் ஓர் கலப்பு உலோகம் _______________
  துத்தநாகம்
  வெண்கலம்
  அலுமினியம்
  பித்தளை
16. மின்கடத்திகளை இணைக்கும் இடத்தில் மேல் பூச்சாக பயன்படும் உலோகம் எது?
  காரீயம்
  வெள்ளீயம்
  துத்தநாகம்
  கந்தகம்
17. வெள்ளீயத்தின் உருகுநிலை என்ன?
  230 டிகிரி செல்சியஸ்
  1280 டிகிரி செல்சியஸ்
  1310 டிகிரி செல்சியஸ்
  2270 டிகிரி செல்சியஸ்
18. வெள்ளை நிறமுடைய ஒரு மிருதுவான உலோகம் எது?
  பிளாட்டினம்
  அலுமினியம்
  துத்தநாகம்
  வெண்கலம்
19. இவற்றில் இரும்புச்சத்து உடைய உலோகங்கள் எது?
  செம்பு, எக்கு
  அலுமினியம், தேனிரும்பு
  வெள்ளீயம், தேனிரும்பு
  எக்கு, இரும்பு
20. வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தா பொருள் எது?
  அலுமினியம்
  வெண்கலம்
  பித்தளை
  கந்தகம்