English Sentences | Tamil Meaning |
---|---|
Don’t keep me waiting, please | தயவுசெய்து என்னை காக்க வைக்காதே |
He has been waiting for a long time | அவன் வெகு நேரமாக காத்துக்கொண்டிருக்கிறான் |
How long had you been waiting? | எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்? |
How long have you been waiting? | எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்? |
I am awfully sorry to have kept you waiting | நீங்கள் எனக்காக இவ்வளவு நேரம் இருக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன் |
I am fed up waiting for you | நான் உனக்காக காத்திருந்ததினால் சோர்ந்து போய்விட்டேன் |
I am sorry to have kept you waiting | உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும் |
I am sorry to keep you waiting | நான் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிக்கவும் |
I am waiting for my wife | நான் என் மனைவிக்காக காத்திருக்கிறேன் |
I am waiting for you | நான் உனக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன் |
I had been waiting for two hours. | நான் இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting in the airport for more than two hours when you arrived | நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting in the Hong Kong airport for two hours | நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting there for more than 45 minutes | நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக |
I have been waiting for you for three hours | நான் உனக்காக மூன்று மணி நேரங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன் |
I have been waiting here for over two hours | நான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக இங்கே காத்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been waiting here for two hours | நான் இங்கே இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருக்கின்றேன் |
I was waiting for you | நான் உனக்காக காத்துக்கொண்டிருந்தேன் |
I was waiting in the bus stand | நான் பேரூந்து நிறுத்தகத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I was waiting in the bus stop until 6 p.m | நான் 6 மணிவரை வரை பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
Reeta is waiting for you at the bus stop | உனக்காக ரீட்டா பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள் |
She is waiting for an hour | அவள் ஒருமணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறாள் |
She is waiting for me | அவள் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் |
Somebody is waiting for you | உங்களுக்காக யாரோ காத்துக் கொண்டிருகிறார்கள் |
Someone is waiting for you | உங்களுக்காக யாரோ காத்துக்கொண்டிருக்கிறார்கள் |
Someone is waiting for you somewhere | யாரோ ஒருவர், உனக்காக எங்கோ காத்து கொண்டிருக்கிறார் |
They are waiting for the bus | அவர்கள் பேருந்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறீர்கள் |
They will have been waiting for me since 2 O’clock | அவர்கள் எனக்காக இரண்டு மணியிலிருந்து காத்துக் கொண்டிருப்பார்கள் |
Waiting room | காத்துகொண்டிருக்கும் / ஓய்வு எடுக்கும் அறை |
We were waiting for you | நாங்கள் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தோம் |
Were they waiting for me? | அவர்கள் எனக்காக காத்திருந்தார்களா? |
You can stay in the waiting room | நீங்கள் ஓய்வு அறையில் தங்கலாமே |