Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for I 445 sentences found.  

    Meaning for I - Subject from the first of the first person singular pronoun used by a speaker or writer of himself
       (தன்மை ஒருமை மறுபெயர்)

    After seeing my brother, I returned home by bus 

    எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்

    All right anything else I can do for you? 

    சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?

    All thorough this period I waited for her 

    இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன்

    Although my neighbor just bought a new car, I am not jealous of him 

    அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை

    Am I a clever one? 

    நான் ஒரு கெட்டிக்காரனா?

    Am I a fool? 

    நான் ஒரு முட்டாளா?

    Am I beautiful? 

    நான் அழகாக இருக்கிறேனா?

    Am I boring you? 

    நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா?

    Am I right? 

    நான் சொல்வது சரியா?

    Am I? Then, I am the son of the father 

    நானா? அப்புறம், நான் என் தந்தைக்கு மகனல்லவா

    Any legend of the temple available here? I mean, in the form of a book? 

    கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்

    Anything else I can do for you? 

    உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?

    Are you producing any film? so I have heard 

    நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன்

    Are you teasing me? I do not care 

    நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை

    As a rule I play in the evening 

    வழக்கமாய் நான் மாலையில் விளையாடுகிறேன்

    As far as I am concerned smoking can be avoided 

    எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்

    As long as I am here, you need not worry about anything 

    நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை

    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset 

    திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்

    As soon as I saw my mother, I ran to meet her 

    நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன்

    At the most I can help the poor man by giving Rs.100/ 

    ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்



    comments powered by Disqus